உகரம்
(முதல் பருவம்)
லிஸி, தன் பெற்றோருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறாள். அவளுடைய பிறந்தநாளுக்காகத் தாத்தாவும் பாட்டியும் வந்திருந்தனர். பிறந்தநாளன்று அனைவரும் அவளை வாழ்த்தி மகிழ்ந்தனர். நண்பர்களும் உறவினர்களும் பரிசுகளைத் தந்தனர். லிஸி அவர்களுக்கு நன்றி தெரிவித்தாள்.
இரவு தூங்குவதற்குமுன், தனக்கு வந்த பரிசுகளை ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தாள். அவளுக்குப் பிடித்த பொம்மைகளும் விளையாட்டுப் பொருள்களும் இருந்தன. தன் தாத்தா தந்த பெட்டியைத் திறந்ததும் மிகவும் வியப்படைந்தாள். அப்போது, தாத்தா அவள் அருகில் வந்தார்.
“தாத்தா, நீங்கள் தந்த பரிசுப் பொருள், மிகவும் உறுதியாகவும் எடை மிகுந்தும் காணப்படுகின்றதே. என்ன பரிசு இது?” என்று கேட்டாள் லிஸி.
“இதனைச் சிற்பம் என்று கூறுவார்கள். இஃது உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் எடை மிகுந்து காணப்படுகிறது.” என்றார் தாத்தா.
“இந்தச் சிற்பத்தில் நிறைய உருவங்கள் உள்ளன. நான் இதுவரை பார்த்தது இல்லை” என்றாள் லிஸி.
“இந்தச் சிற்பங்களை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்?” என்றார் தாத்தா.
“என்ன, இவற்றை நேரில் பார்க்கமுடியுமா? அப்படியெனில் இவை எங்குள்ளன? என்னை அங்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றாள் லிஸி.
“கட்டாயம் அழைத்துச் செல்கிறேன் நான் அடுத்த வாரம் தமிழ்நாட்டிற்குச் செல்கின்றேன். அங்குதானே புகழ்பெற்ற மாமல்லபுரம் உள்ளது. அங்குச் சென்றால் நீ இந்தச் சிற்பங்களைக் காணலாம்” என்றார் தாத்தா.
“நானும் உங்களுடன் வருகிறேன். எனக்கு இவற்றை நேரில் பார்க்க ஆவலாக உள்ளது” என்றாள் லிஸி.
லிஸி, தான் விரும்பியபடியே தன் தாத்தா பாட்டியுடன் தமிழ்நாட்டிற்குச் சென்றாள். அவளை மாமல்லபுரத்திற்குத் தாத்தா அழைத்துச் சென்றார்.
“அங்கு மிகப்பெரிய யானையின் உருவத்தைக் கண்டாள் லிஸி. “தாத்தா, இந்த யானையைப் பாருங்கள். எவ்வளவு பெரிதாக இருக்கிறது. அப்படியே உண்மையான யானைபோல இருக்கிறதே” என்று வியந்தாள், லிஸி.
| “ஆமாம், லிஸி. இதன் சிறப்பு என்ன தெரியுமா? இஃது ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய பாறையில் யானையின் முழு உருவமும் தெரியும்படி எவ்வளவு நுணுக்கமாகச் சிற்பி செதுக்கியுள்ளார் பார்த்தாயா?” என்று தாத்தா கூறினார். “ஓ! சிற்பத்தைச் செதுக்குபவர் பெயர் சிற்பியா? அவர் செதுக்கியுள்ள இந்த யானைச் சிற்பம் மிக அழகாக இருக்கிறது, தாத்தா. இங்கு வேறு சில சிற்பங்களும் உள்ளன. இவை எப்போது செதுக்கப்பட்டன? என்று கேட்டாள் லிஸி. | |
|
“இவை பல்லவ மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்டன. தமிழர்களின் கலைத்திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன” என்றார் தாத்தா. “தாத்தா, அங்கே பாருங்கள், ஏதோ ஐந்து வண்டிஇருப்பதுபோல உள்ளதே. அவற்றின் சக்கரங்கள் கல்லினால் செய்யப்பட்டுள்ளன” என்று வியப்புடன் கூறினாள் லிஸி. |
“நீ இப்போது பார்த்தவை ஓடாத தேர்கள். இவையும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பஞ்ச பாண்டவர் இரதங்கள் என்பர்” என்றார் தாத்தா.
“அப்படியா, தாத்தா!!” என்ற லிஸி அருகில் இருந்த பாறைகள் இரண்டைப் பார்த்தாள். அவற்றில் நூற்றுக்குமேற்பட்ட சிற்பங்கள் இருந்தன. “தாத்தா, இங்கே பாருங்கள். நிறைய சிற்பங்கள் உள்ளன” என்று வியப்புடன் கூறினாள் லிஸி.
| “லிஸி, இவை புடைப்புச் சிற்பங்கள். நாம் காணும் வகையில் பாறையில் புடைத்துக் காணப்படுகின்றன”. என்றார் தாத்தா. அச்சிற்பங்களின் அருகில் சென்று, அவற்றைத் தொட்டுப் பார்த்தாள் லிஸி. “தாத்தா, இங்குப் பாருங்கள், ஒருவர் ஒற்றைக்காலில் நிற்கிறார். அருகில் அருவியிலிருந்து நீர் கொட்டுகிறது. நீரில் பறவைகள் நீந்துகின்றன. அங்கு மான், புலி, சிங்கம், குரங்கு ஆகியவற்றின் சிற்பங்கள் உள்ளன! என்று கூறினாள் லிஸி. |
|
| “ஆமாம், லிஸி, அதோ பார். கடற்கரைக் கோவில். இங்கு வருபவர்கள் இதனைப் பார்க்காமல் செல்லமாட்டார்கள். இது, கட்டுமானக் கோவிலுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதனை உலகப் பாரம்பரியச் சின்னமாக 1984ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்துள்ளது” என்றார் தாத்தா. “மிகவும் சிறப்பு. நீங்கள் கூறுவதைக் கேட்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது தாத்தா” என்றாள் லிஸி. |
![]() |
| 1. பரிசு | - | அன்பளிப்பு |
| 2. ஆவல் | - | விருப்பம் |
| 3. நுணுக்கமாக | - | நுட்பமாக |
| 4. இரதங்கள் | - | தேர்கள் |
சிற்பம்
மாமல்லபுரச் சிற்பங்களைக் காண்பதற்காகத் தமிழ்நாட்டிற்குச் செல்லவேண்டும் என்று லிஸி விரும்பினாள்.
புடைப்புச் சிற்பங்களைத் தொட்டுப் பார்த்த லிஸி இங்கு ஒருவர் ஒற்றைக்காலில் நிற்கிறார். அருகில் அருவியிலிருந்து நீர் கொட்டுகிறது. நீரில் பறவைகள் நீந்துகின்றன. அங்கு மான், புலி, சிங்கம், குரங்கு ஆகியவற்றின் சிற்பங்கள் உள்ளன என்றாள்.
கடற்கரைக் கோவில்