உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.7 செந்தமிழ்ச்செல்வம்

மூதுரை

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

(பாடல் – 26)

- ஔவையார்

(மாசற – குற்றம் நீங்க; சீர்தூக்கின் – ஆராய்ந்து பார்ப்பின்; தேசம் – நாடு)

பொருள்

அரசனையும் குற்றம் நீங்கக் கற்றவனையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால், கற்றவனே சிறப்புடையவன் ஆவான். ஏனெனில், அரசனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்.

பழமொழி

நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்.

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. அகழாய்வு
  2. கீழடி
  3. உறைகிணறு
  4. வளையங்கள்
  5. அணிகலன்கள்

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. அகழாய்வு
  2. தொலைக்காட்சி
  3. வியப்பு