உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

17.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கீழ்க்காணும் சொற்களைப் பயன்படுத்தி, இயற்கையை வருணித்துத் தொடர்கள் எழுதுக.

அழகான – பசுமையான – உயரமான – நீளமான – அடர்ந்த

காடுகள் – பூக்கள் – ஆறு – மலை – புல்வெளி

17.11 உயர்நிலைத் திறன்

ஒரு கதையின் நிகழ்வுகள் இடம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வரிசைப்படுத்தி எழுதுக.

  1. போட்டி நடைபெறுவதற்குப் பதினைந்து நாள் இருந்தது.
  2. போட்டியில் தமிழ்மணி வெற்றி பெறக்கூடாது எனப் பொன்னன் நினைத்தான்.
  3. பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி அறிவிக்கப்பட்டது.
  4. போட்டி நடைபெறுவதற்கு ஒருவாரத்திற்குமுன்பு, தமிழ்மணியின் திருக்குறள் புத்தகத்தை எடுத்து மறைத்துவைத்தான்.
  5. எந்தச் செயலையும் காலம் கருதிச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதைப் பொன்னன் உணர்ந்துகொண்டான்.
  6. தமிழ்மணியும் தன் பெயரைப் பதிவுசெய்தான்.
  7. தமிழ்மணி நேரத்தை வீணாக்காமல், முதல் வாரத்திலேயே போட்டிக்குத் தேவையான குறள்களை நன்கு படித்துவிட்டான்.
  8. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ள முன்வந்தனர்.
  9. முதற்பரிசு தமிழ்மணிக்கே கிடைத்தது. பொன்னனுக்கு மூன்றாமிடம் கிடைத்தது.
  10. தமிழ்மணி எப்படி வெற்றி பெற்றான் எனப் பொன்னன் யோசித்தான்.

17.12 செயல்திட்டம்

கீழடி ஆய்வில் கிடைத்த பொருள்களுள் சிலவற்றின் மாதிரிகளைச் செய்துவருக.