உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
19.5 கேட்டல் கருத்தறிதல்

அனுபவமே சிறந்த ஆசிரியர்

அரசர் ஒரு போட்டியை அறிவித்தார். அரசரின் முன், 4 அடி நீளமுள்ள பனைமரத்துண்டு இருந்தது. அது அடி எது ? நுனி எது ? என்று கண்டறிய முடியாதபடி, அந்தப் பனைமரத்துண்டு அடி முதல் நுனி வரைஒரே பருமன் கொண்டதாக இருந்தது. அதன் அடிப்பக்கம் எது? மேல்பக்கம் எது? என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு வழங்கப்படும் என்றார் அரசர்.

மக்கள் அனைவரும் விடை காண முடியாமல் திகைத்தனர். ஆனால், இளைஞன் ஒருவன் 6 அடி ஆழமுள்ள குழி ஒன்றை வெட்டினான். குழியில் தண்ணீர் நிரப்பினான். நீரில் பனைமரத்துண்டைப் போட்டான். மரத்துண்டின் ஒரு பகுதி தண்ணீரினுள் சென்றது. அதுவே மரத்துண்டின் அடிப்பகுதி என்றும் மற்றது மேற்பகுதி என்றும் கூறினான். பரிசையும் பெற்றான். ஆனால், யாராலும் கண்டுபிடிக்க முடியாததை நீ எப்படிக் கண்டறிந்தாய் என அரசர் கேட்டார். அதற்கு அந்த இளைஞன், போட்டி பற்றி என் தாத்தாவிடம் கூறினேன்; அவர் சொன்னபடி செய்தேன்; வெற்றிபெற்றேன் என்றான். முதியவரின் அனுபவ அறிவைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

வினாக்கள்

4 அடி நீளமுள்ள பனைமரத்துண்டின் அடி மற்றும் நுனி எது என்று கண்டுபிடிக்க வேண்டும்

ஆயிரம் பொற்காசு

இளைஞன், மரத்துண்டின் அடிப்பகுதியை கண்டறிய குழியை வெட்டினான்

பனைமரம்

இளைஞனின் தாத்தா

சுவைச்செய்தி

தாவரங்களும் பிற உயிரினங்களைப் போன்றே வாழ்க்கையை வாழ்கின்றன என்று உலகப் புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் டாக்டர் ஜகதீஷ் சந்திர போஸ் (1858 – 1937) நிறுவிய போது இவ்வையகமே அவரை வியப்புடன் பார்த்தது. மற்ற உயிரினங்களைப் போன்று தாவரங்களும் துன்ப, துயரங்களுக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகின்றன என அவர் கண்டறிந்தார். தாவர உயிரினங்கள் பற்றிய தமது ஆய்வுகளையும், ஆய்வுமுடிவுகளையும் ஆராய்ச்சிக்கட்டுரைகளாக ஒரு நூல் வடிவில் டாக்டர் ஜகதீஷ் சந்திர போஸ் 1902ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலின் பெயர் “The Reaction of Living and Non-living” என்பதாகும்.