உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 20
20.5 கேட்டல் கருத்தறிதல்

இரப்பர் உருவான கதை

கையில் தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் தன்மை உடைய பொருள் இரப்பர் (Rubber). அக்காலத்தில் எந்தப் பொருளின்மீதும் தண்ணீர் ஒட்டாமல் இருக்க மட்டுமே அதனைப் பயன்படுத்தினர். ஆனால், அமெரிக்காவின் சார்லஸ் குட்இயர் (Charles Goodyear, 1800 – 1860) என்பவர் எக்காரணமும் இன்றி இரப்பரின் மீது அளவுகடந்த விருப்பம் கொண்டிருந்தார். அவர் இரப்பரைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர ஆய்வுகள் மேற்கொண்டார்.

ஒருநாள் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, இரப்பரிலிருந்து சிறுபகுதி அருகில் எரிந்துகொண்டிருந்த அடுப்பில் விழுந்தது. அதனைக் கவனிக்காமல் தன் சோதனையைத் தொடர்ந்தார் சார்லஸ். ஆய்வு நேரம் முடிந்ததும் அடுப்பினைத் தூய்மை செய்யச் சென்றவருக்கு வியப்பு ஏற்பட்டது. அங்கு விழுந்திருந்த இரப்பர் இறுகி, கையில் ஒட்டாமல் வந்தது. மேலும், அது மென்மையாகவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் பெற்றிருந்தது. இதனைக் கண்டறிந்த சார்லஸ், இரப்பரில் பொருட்களை உருவாக்கி விற்பனை செய்தார். இவரை இரப்பரின் தந்தை என்று அழைக்கின்றனர்.

வினாக்கள்

கையில் தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது.

அக்காலத்தில் எந்தப் பொருளின்மீதும் தண்ணீர் ஒட்டாமல் இருக்க இரப்பரைப் பயன்படுத்தினர்.

சார்லஸ் குட்இயர் (Charles Goodyear)

இரப்பரை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, இரப்பரிலிருந்து சிறுபகுதி அருகில் எரிந்துகொண்டிருந்த அடுப்பில் விழுந்தது.

அமெரிக்கா