உகரம்
(இரண்டாம் பருவம்)
- (பாடல் 139)
சமண முனிவர்கள்
(அஞ்சுவது – அச்சப்படுவது; உவப்ப – மகிழ; எஞ்ஞான்றும் – எப்போதும்)
அறியவேண்டிய நன்மை, தீமைகளை அறிந்து, அடக்கமுடையவராகத் திகழவேண்டும். அச்சம் கொள்ளவேண்டிய பழிச்செயல்களுக்கு அச்சப்பட வேண்டும். செய்யவேண்டிய செயல்களை உலகம் மகிழுமாறு செய்ய வேண்டும். அறநெறியில் வந்த பொருளால் மகிழ்ந்து வாழும் இயல்பும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இப்படிபட்டவர்கள் எப்போதும் துன்புற்று வாழ்வதில்லை.
நேர்மையே சிறந்த கொள்கை