உகரம்
(இரண்டாம் பருவம்)
உலகப்புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசனை நேர்காணல் செய்வதற்காக உங்களை அழைக்கிறார்கள். அவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்பீர்கள்? அவற்றை இங்கே எழுதுங்கள். தாமஸ் ஆல்வா எடிசனை நேர்காணல் செய்வதற்கான கேள்விகள்:
கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு, உங்கள் நண்பருக்குக் கடிதம் எழுதுக.
அறிவியல் கண்காட்சி – பள்ளி – ஆசிரியர் – அழைத்துச் செல்லல் – மாணவர்கள் – பார்வையிடுதல் – வியப்படைதல் – செய்து பார்த்தல் – புதிய செய்திகளைப் பெறுதல் – மகிழ்ச்சி அடைதல் – வீடு திரும்புதல்.
செயற்கைக்கோள் அல்லது விண்கலம் மாதிரியை உருவாக்குக.