உகரம்
(இரண்டாம் பருவம்)
பேராசிரியர் ஒருவர் தம் நண்பர்களுடன் எகிப்து பிரமிடுகளைப் பார்க்கச் சென்றார். அப்போது நண்பர்களுள் ஒருவர், பேராசிரியரிடம் ‘இந்தப் பிரமிடின் உயரத்தைச் சரியாகக் கூறமுடியுமா?’ என்று கேட்டார். அதற்குப் பேராசிரியர் ’முடியும்’ என்றார். அருகில் இருந்தவர்கள் பேராசிரியர் கூறியதை நம்ப மறுத்தனர். பேராசிரியர் உடனே தன் கையில் வைத்திருந்த அளவுநாடாவைக்(Tap) கொண்டு பிரமிடின் நிழலை அளந்தார். பிறகு அதே டேப்பில் தன் நிழலை அளந்தார். தம் நிழலையும் உயரத்தையும் கணக்கிட்ட அவர், பிரமிட்டின் உயரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னார். நண்பர்கள் பேராசிரியரின் அறிவை வியந்து பாராட்டினர். அப்பொழுது பேராசிரியர் ‘நண்பர்களே இந்த உலகில் இயலாத செயல் என்று எதுவும் இல்லை. எதற்கும் எளிய வழி ஒன்று உள்ளது’ என்று கூறினார்.
பேராசிரியர் தம் நண்பர்களுடன் எகிப்து பிரமிடுகளைப் பார்க்கச் சென்றார்.
நண்பர், பேராசிரியரிடம், ‘இந்தப் பிரமிடின் உயரத்தைச் சரியாகக் கூறமுடியுமா?’ என்று கேட்டார்.
அளவு நாடா (Tap)
பேராசிரியர் அளவுநாடாவைக் கொண்டு பிரமிடின் நிழலையும், தம் உயரத்தையும் கணக்கிட்டு பிரமிட்டின் உயரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டார்.
நண்பர்களிடம் பேராசிரியர், “இந்த உலகில் இயலாத செயல் என்று எதுவும் இல்லை. எதற்கும் எளிய வழி ஒன்று உள்ளது” என்று கூறினார்.
நுண்செயலி (Processor) என்பது கணினியின் மூளை போன்று செயல்படுவது. கணினியில் விரும்பிய செயல்களை மேற்கொள்ள, நிரல்களை வடிவமைக்க, நினைவகத்திலிருந்து (memory) தரவுகளைப் (data) பயன்படுத்த, வெற்றிகரமாக கணிதச் செயல்பாடுகளை நிறைவேற்ற என்று பல வழிகளிலும் இந்த நுண்செயலி பணியாற்றுகிறது.
அமெரிக்காவின் இன்டெல் (Intel) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தொழில்நுட்ப வல்லுநரான மர்சியன் டெடோஃப் (Mercian Tedoff) என்பவர் 1969ஆம் ஆண்டு முதலாவது நுண்செயலியை உருவாக்கி அதற்கு இன்டெல்-4004 எனப் பெயரிட்டார். இது 1971ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. இதற்கான காப்புரிமையை இன்டெல் நிறுவனம் பெற்றது.