உகரம்
(இரண்டாம் பருவம்)
தமிழில் சில எழுத்துகளின் ஒலிகள் ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால், அவை வடிவம், பிறக்கும் இடம், ஒலிக்கும் முயற்சி, கால அளவு ஆகியவற்றால் மாறுபடும். அவற்றை நாம் சரியாகப் பின்பற்றினால் பிழை நேர்வதைத் தவிர்க்கலாம்.
மலர்கள் மணம் வீசின. |
மனம் போல் வாழ்வு |
மயில் அழகாக ஆடும். |
கிளியின் அலகு சிவப்பு நிறம் |
உன்மீது அக்கறைஉள்ளது |
ஆற்றின் அக்கரையில் யானை இருந்தது |
| மணம் – வாசனை | மனம் – உள்ளம் |
| அழகு – வனப்பு | அலகு – பறவையின் மூக்கு |
| அக்கறை – ஈடுபாடு | அக்கரை – அந்தக் கரை |