உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 23
23.7 செந்தமிழ்ச்செல்வம்

நீதிநெறி விளக்கம்

கல்வி உடைமை பொருளுடைமை என்றிரண்டு
செல்வமும் செல்வம் எனப்படும் – இல்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமும்
தலைவணங்கித் தாழப் பெறின்.

- (பாடல் 16 )

- குமரகுருபரர்

(இல்லார் - இல்லாதவர்; இரந்து - யாசித்து; தலைவணங்கி – பணிவாக வணங்கி)

பொருள்

கல்வி, பொருள் என இவ்விரண்டும் செல்வம் எனப்படும். இவ்விரண்டும் இல்லாதவர், இருப்பவரிடம் யாசித்துப் பெறுவதுபோலத் தாமும் பிறரைப் பணிந்து வணங்கி இவற்றைப் பெறவேண்டும்.

பழமொழி

ஊருடன் ஒத்து வாழ்.

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. ஆராய்ச்சி மணி
  2. மனுநீதிச்சோழன்
  3. தேர்க்கால்

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. காவலர்
  2. வழக்கு
  3. தீர்ப்பு
  4. புறா