23.10 படைப்பாற்றல் வளர்ப்போம்
அருண் அடுத்த மாதம் ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். அதனால், ஒவ்வொரு நாளும் மாலையில் பயிற்சி மேற்கொண்டான். அன்றும் வழக்கம்போல, விளையாட்டுத் திடலில் ஓடிக்கொண்டு இருந்தான். அப்போது, அங்குத் தமிழ்வாணன் வந்தான். அவன், அருண் ஓடும் பாதையில் வாழைப்பழத் தோலை வீசினான். அப்போது அங்கு . . . .
23.11 உயர்நிலைத்திறன்
கீழ்க்காணும் தொடர்கள் வரிசை மாற்றப்பட்டுள்ளன. அவற்றை ஒழுங்குபடுத்தி, உரைப்பகுதியாக மாற்றுக.
- குழந்தையைக் காப்பாற்றிய அவனை அனைவரும் பாராட்டினர்.
- சாலையோரம் நடந்து கொண்டிருந்த சிறுவன் அதனைக் கண்டான்.
- குதிரை வண்டி அவனைக் கடந்து போயிற்று.
- அந்தச் சிறுவனுக்கு அப்போது ஏழுவயதுதான். அவன் பெயர் நரேந்திரன்.
- அந்த நரேந்திரன்தான் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் என்று அழைக்கப்பட்டவர் ஆவார்.
- அப்போது, குதிரை வண்டி ஒன்று தெருவில் வந்துகொண்டிருந்தது.
- குழந்தை ஒன்று தெருவில் தளர்நடை போட்டு நடந்து வந்தது.
- குழந்தையின் அருகில், குதிரை வண்டி புயல்போல நெருங்கியது.
- அதனைக் கண்டவர்கள் குழந்தைக்கு என்ன ஆகுமோ என்று அஞ்சினர்.
- சிறுவன் தன் உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் சட்டெனப் பாய்ந்து குழந்தையைத் தூக்கினான்.
23.12 செயல்திட்டம்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் காணப்படும் நீதிநூல்களைப் பற்றித் தொகுப்பேடு உருவாக்குக.