உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
25.2 படிப்போம்

மூலிகை மருத்துவம்

இயற்கை நமக்குத் தந்த வரம் மூலிகைத் தாவரங்கள். இவை, நம்மை நோயிலிருந்து பாதுகாக்கின்றன. மூலிகைத் தாவரங்கள் சிலவற்றைப் பற்றி இப்பாடப் பகுதியில் காண்போம்.

வேம்பு

பழங்காலத்தில் இருந்தே அம்மை நோய்க்கு அருமருந்தாக விளங்குகிறது. காற்றில் பரவும் கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தோரணமாகக் கட்டப்படுகிறது. மேலும், வேளாண்மையில் உரமாகவும் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது. வேப்பங்குச்சி பல் துலக்க உதவுகிறது. வயிற்றுப் புண்களைப் போக்குகிறது.

துளசி

மூலிகைகளின் அரசி என அழைக்கப்படுகிறது. மனித உடலில் ஏற்படும் சளியை அகற்றுகிறது. சிறந்த கிருமி நாசினியாகச் செயல்படுகிறது.

சிறுபீளை

விஷக்கடிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. மனிதர்களின் சிறுநீரகத்தில் ஏற்படும் கல்லைப் போக்குகிறது. இதனை ’அறுவைச் சிகிச்சை மூலிகை’ என்று கூறுவதுண்டு.

ஆவாரை

நீரிழிவு (டயாபடிஸ்) நோய்க்கு அருமருந்தாகப் பயன்படுகிறது. புற்றுநோய்க்கு எதிரான ஆற்றலைக் கொண்டுள்ளது.”ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ!” என்னும் பழமொழிக்கு எடுத்துக்காட்டாக மருத்துவப் பண்புகள் கொண்டுள்ளது.

கீழாநெல்லி

மஞ்சள் காமாலை நோய்க்குச் சிறந்த மருந்தாக உள்ளது. கண் நோய், நீரிழிவு நோய், கல்லீரல் நோய், ஆறாத புண் ஆகியவற்றைப் போக்குகிறது.

நிலவேம்பு

வேர், இலை, பூ ஆகிய அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் நிறைந்தவை. டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களைக் குணப்படுத்துகிறது. இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இது எல்லா நிலப்பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது.

பொருள் அறிவோம்

1. தோரணம் - அழகுக்காக வாசலில் தொங்கவிடப்படும் மாலை
2. பூச்சி விரட்டி - பயிர்களைப் பூச்சிகளிடமிருந்து காப்பது
3. விஷக்கடி - பூச்சி, பாம்பு போன்றவற்றால் ஏற்படும் நஞ்சு

விடை காண்போம்

வேம்பு

துளசி

விஷக்கடிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. மனிதர்களின் சிறுநீரகத்தில் ஏற்படும் கல்லைப் போக்குகிறது

ஆவாரம்பூ நீரிழிவு (டயாபடிஸ்) நோய்க்கு அருமருந்தாகப் பயன்படுகிறது. புற்றுநோய்க்கு எதிரான ஆற்றலைக் கொண்டுள்ளது.

நிலவேம்பு