உகரம்
(இரண்டாம் பருவம்)
எறும்புகளின் கூட்டம் நடைபெற்றது. தலைவர் எறும்பு, ’நண்பர்களே, மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கிவிட்டது. நம்மிடமிருந்த உணவும் தீர்ந்துவிட்டது. நாம் நமக்கான உணவைச் சேகரிக்கச் செல்வோம், வாருங்கள்’ என்றது.
எல்லா எறும்புகளும் மிகச் சுறுசுறுப்பாகக் கிளம்பின. ஆனால், ஓர் எறும்பு மட்டும் செல்லாமல் நின்றது. அதனைக் கண்ட தலைவர் எறும்பு ’ஏன் இப்படி நிற்கிறாய்?’ எனக் கேட்டது. அதற்கு அந்த எறும்பு, ‘இப்போதுதானே கோடைக்காலம் தொடங்கியுள்ளது, சில நாள் கழித்துச் சென்றால் என்ன?’ எனக் கேட்டது.
அதற்குத் தலைவர் எறும்பு, ‘தம்பி, எதைச் செய்தாலும் உரிய காலத்தில் செய்ய வேண்டும். இல்லையெனில் பாதிப்பு நமக்குத்தான். எதிர்பாராத விதமாக மழைவந்தால், நாம் உணவுக்கு என்ன செய்வோம்? நாளை எனத் தள்ளி வைத்தால், நமக்குத்தான் துன்பம்’ என்றது. தன் தவற்றை உணர்ந்த எறும்பு, உடனே உணவு தேடச் சென்றது.
தலைவர் எறும்பு
மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கிவிட்டது. உணவும் தீர்ந்துவிட்டது. எனவே எறும்புகள் உணவைச் சேகரிக்க புறப்பட்டன
ஓர் எறும்பு “இப்போதுதானே கோடைக்காலம் தொடங்கியுள்ளது. சில நாள் கழித்துச் சென்றால் என்ன ? “ என்று உணவுத் தேடச் செல்லவில்லை
செய்யும் செயலை உரிய காலத்தில் செய்ய வேண்டும். இல்லையெனில் அதனால் பாதிப்பு தான் ஏற்படும்
| வெளிநாட்டினரால் பச்சை இரத்தம் (Green Blood) என்று அழைக்கப்படுவது அறுகம்புல். இது, இரத்தத்தைத் தூய்மைப்படுத்துகிறது. ஜெர்மனியில் அறுகம்புல் சாறு கலந்த ரொட்டியைத் தயாரித்து உண்கின்றனர். இலங்கையில் முதன்முதலில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் நாக்கில், அறுகம்புல்லைப் பாலில் நனைத்துத் தேய்த்து அனுப்புகின்றனர். |
|