உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

26.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

மூன்று சொல் கொண்ட தொடரில் இடையில் வரும் சொல் ஒரு விலங்கு / பறவையின் பெயராக வரும்படி பாடலைத் தொடர்ந்து எழுதுக.

அழகிய மயிலைக் கண்டேனே!

ஆடிப்பாடி மகிழ்ந்தேனே!

துள்ளும் மானைக் கண்டேனே!

துள்ளிப் பிடிக்கச் சென்றேனே!

பாடும் குயிலைக் கண்டேனே!

பாட்டுக் கேட்டு மகிழ்ந்தேனே!

ஓடும் முயலைக் கண்டேனே!

ஓடிப் பிடிக்க முனைந்தேனே!

26.11 உயர்நிலைத்திறன்

கீழ்க்காணும் உரைப்பகுதியைப் படித்துச் சுருக்கி எழுதுக.

ஒவ்வொருவரும் பொருளை ஈட்டுவதற்கு அரும்பாடுபடுகின்றனர். அவ்வாறு பாடுபட்டு ஈட்டும் பொருளில் சிறுபகுதியை மட்டுமாவது சேமித்தல் வேண்டும். அவ்வாறு சேமிக்கும் பொருள், ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதற்கு ஏற்ப, நாளடைவில் பெருகிப் பிற்கால வாழ்வுக்கு உதவும். இப்பழமொழி, பொருளைச் சேர்ப்பதற்காக மட்டுமன்று, உழைப்பிற்கும் கல்விக்கும்கூடப் பொருந்தும். நாம் நாள்தோறும் சிறுகச்சிறுக விடாது கற்போமாயின் நாளடைவில் நம் அறிவு வளர்ந்து ஓங்கும்.

26.12 செயல்திட்டம்

நீங்கள் அறிந்த மூலிகைகளின் படங்களை திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.