உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 28
28.3 தெரிந்து கொள்வோம்

தொகைச்சொற்கள்

இருதிணை – இரண்டு + திணை முக்கனி – மூன்று + கனி
நாற்றிசை – நான்கு + திசை ஐம்பொறி – ஐந்து + பொறி
அறுசுவை – ஆறு + சுவை

மேலும் சில தொகைச்சொல் அறிவோம்.

2. இருசுடர் ஞாயிறு, திங்கள்
3. முத்தமிழ் ஞாயிறு, திங்கள்
மூவேந்தர் சேரர், சோழர், பாண்டியர்
முப்பால் அறம், பொருள், இன்பம்
முக்காலம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
மூவிடம் தன்மை, முன்னிலை, படர்க்கை
4. நாற்படை தேர், யானை, குதிரை, காலாள்
5. ஐம்பூதம் நிலம், நீர், காற்று, தீ, வானம்
ஐம்பெருங்காப்பியம் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
ஐந்திலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
ஐம்பால் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
ஐந்திணை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
6. ஆறு பொழுது மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு
7. எழுவகைப் பெண்பாற்பருவம் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
எழுவகை ஆண்பாற்பருவம் பாலன், விடலை, காளை, மீளி, மறவோன், திறவோன், முதுமகன்
பூவின் ஏழு பருவம் அரும்பு, மொட்டு, மலர், முகை, அலர், வீ, செம்மல்
கடையெழு வள்ளல் பாரி, காரி, பேகன், ஆய், ஓரி, அதிகன், நள்ளி
8. எண்வகை மெய்ப்பாடு நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை
9. நவ(ஒன்பது) இரத்தினம் கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்
10. பத்துப் பருவம் (ஆண்) காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை
பத்துப் பருவம் (பெண்) காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல்