உகரம்
(இரண்டாம் பருவம்)
துறவி ஒருவர் ஒற்றையடிப் பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், “ஐயா, அந்தப்பக்கம் சென்று விடாதீர்கள். ஒரு பாம்பு அந்த வழியாகப் போவோர் வருவோரையெல்லாம் கொத்துகிறது என்றனர். அதற்கு அந்தத் துறவியோ “ நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறியவாறே சென்றார். காலடியோசை கேட்டவுடன் புற்றிலிருந்து வந்த பாம்பு, துறவியைக் கொத்த வந்தது. அப்போது, துறவி அந்தப் பாம்பைக் கட்டுப்படுத்தும் வித்தையைச் செய்யவே, பாம்பு அமைதியாக இருந்தது. “யாருக்கும் தீங்கு செய்யாதே“ என்று சொல்லிவிட்டுச் சென்றார் அந்தத் துறவி. சில மாதம் கழித்து, அவர் மீண்டும் அந்த வழியே வந்தார். அவரை அடையாளம் கண்டு பாம்பு வெளியே வந்தது. அதன் உடல் மெலிந்திருந்தது. “ஏன் இப்படி இருக்கிறாய்?“ என்று அவர் கேட்டார். அதற்கு அந்தப் பாம்பு, “யாரையும் துன்புறுத்தக்கூடாது என்று கூறினீர்கள். நானும் அமைதியாகத்தான் இருந்தேன். ஆனால், நான் அமைதியாக இருப்பதைப் பார்த்து, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் என்னைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினர். உயிருக்குப் பயந்து, யார் கண்ணிலும் படாமல் வாழ்கிறேன்“ என்று பரிதாபமாகக் கூறியது. “அடடே, யாருக்கும் தீங்கு செய்யாதே என்றுதான் கூறினேன். ஆனால், உன்னை யாராவது துன்புறுத்தும்போது, சீறக்கூடாது என்று கூறவில்லையே“ என்றார் அந்தத் துறவி.
துறவி ஒற்றையடிப் பாதை வழியே நடந்து சென்றார்.
துறவியைக் கண்ட சிறுவர்கள், ‘ஐயா அந்தப்பக்கம் சென்று விடாதீர்கள். ஒரு பாம்பு அந்த வழியாகப் போவோர் வருவோரையெல்லாம் கொத்துகிறது’ என்று கூறினர்.
“யாருக்கும் தீங்கு செய்யாதே” என்று துவி சொன்னதைக் கேட்ட பாம்பு அமைதியாக யார் கண்ணிலும் படாமல் பயந்து வாழ்ந்ததால் உடல் மெலிந்து காணப்பட்டது.
நான் அமைதியாக இருப்பதைப் பார்த்து, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் என்னைக் கல்லால் அடித்து துன்புறுத்தினர். அதனால் உயிருக்குப் பயந்து வாழ்வதாகப் பாம்பு பரிதாபமாக கூறியது.
பாம்புக்குத் துறவி, “நீ யாருக்கும் தீங்கு செய்யாதே என்றுதான் கூறினேன். ஆனால், உன்னை யாராவது துன்புறுத்தும்போது, சீறக்கூடாது என்று கூறவில்லையே” என்றார்.
சாக்ரடீஸ், பிளேட்டோவுடன் கடைத்தெரு வழியாகச் சென்றார். அப்பொழுது ஒவ்வொரு பொருளையும் நுட்பமாகப் பார்த்தார். இதைக் கண்ட பிளேட்டோ ‘நீங்கள் எந்தப் பொருளையும் வாங்கப் போவதில்லை, பின்பு ஏன் ஒவ்வொரு பொருளையும் கூர்ந்து பார்க்கிறீர்கள்‘ என்று கேட்டார். அதற்குச் சாக்ரடீஸ், ‘உண்மைதான். நான் எவற்றையும் வாங்கப்போவதில்லை. ஆனால், எனக்கு வேண்டாத, நான் பயன்படுத்தாத பொருள்கள் இந்த உலகத்தில் எவ்வளவு இருக்கின்றன என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்‘ என்றார். |
|