உகரம்
(இரண்டாம் பருவம்)
இருசொல் இணைவது புணர்ச்சி
(எ.கா.)
| 1. | தமிழ் | + | மொழி | = | தமிழ்மொழி | ||
| 2. | ஆணி | + | வேர் | = | ஆணிவேர் | ||
| 3. | வாழை | + | மரம் | = | வாழைமரம் |
விகாரப் புணர்ச்சி
இரு சொல் இணையும்போது மாற்றம் உண்டு
தோன்றல்
இடையில் ஓர் எழுத்து தோன்றும்
(எ,கா.)
| 1. | திரு | + | குறள் | = | திருக்குறள் | ||
| 2. | தமிழ் | + | பாடம் | = | தமிழ்ப்பாடம் | ||
| 3. | மலை | + | தேன் | = | மலைத்தேன் | ||
| 4. | பட்டு | + | சட்டை | = | பட்டுச்சட்டை |
திரிதல்
ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாக மாறும்
(எ.கா.)
| 1. | பல் | + | பசை | = | பற்பசை | ||
| 2. | மண் | + | குடம் | = | மட்குடம் | ||
| 3. | அருள் | + | செல்வம் | = | அருட்செல்வம் | ||
| 4. | பொன் | + | சிலம்பு | = | பொற்சிலம்பு |
கெடுதல்
ஓர் எழுத்து கெடும் (மறையும்)
(எ.கா.)
| 1. | மரம் | + | வேர் | = | மரவேர் | ||
| 2. | வட்டம் | + | வளையல் | = | வட்டவளையல் | ||
| 3. | பாடம் | + | நூல் | = | பாடநூல் | ||
| 4. | தங்கம் | + | மோதிரம் | = | தங்கமோதிரம் |