உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
29.7 செந்தமிழ்ச்செல்வம்

மணிமேகலை

அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும் அல்லது
கண்டது இல்.

- (பாடல் வரி 228 – 231)

- சீத்தலைச் சாத்தனார்

(மன்னுயிர் – நிலைபெற்ற உயிர் ; உண்டி – உணவு ; உறையுள் – இருப்பிடம்)

பொருள் :

அறம் என்பது யாது என்றால், உயிர்களிடத்து எந்த வேறுபாடும் இன்றி உணவும் உடையும் வாழும் இடமும் தருவதே ஆகும்.

பழமொழி

முயற்சி திருவினை ஆக்கும்

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. மனிதநேயக் கொள்கை
  2. வள்ளலார் வழி
  3. வாடிய பயிர்
  4. பசித்தோர்க்கு உணவு

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. உணவு
  2. உள்ளம்
  3. உயிர்கள்
  4. சமம்