உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

29.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கொடுக்கப்பட்ட பாதிக்கதையுடன் உம் கற்பனையை இணைத்து மீதிக் கதையைக் கூறுக. பொருத்தமான தலைப்பு ஒன்றும் தருக.

செல்வன் தன் தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, செல்வன் எறிந்த பந்து, அருகிலிருந்த குளத்தினுள் விழுந்துவிட்டது. பந்து தண்ணீரில் மிதப்பதைக் கண்டு, இருவரும் பந்தை எடுக்க முயற்சி செய்தனர். அப்போது, எதிர்பாராத வகையில்…

29.11 உயர்நிலைத்திறன்

பள்ளி ஆண்டு விழா விழாவிற்கு வருகை தர இருக்கும் சிறப்பு விருந்தினரை வரவேற்பதற்காக உரை ஒன்றனை உருவாக்குக.

29.12 செயல்திட்டம்

நீங்கள் செய்த நற்செயல் ஒன்றனை வரைகதையாக (Cartoon) வரைந்து வருக.