உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.5 கேட்டல் கருத்தறிதல்

அன்பு வேண்டும்

அன்பு வேண்டுமா? – தம்பீ

அழகு வேண்டுமா?

அன்பைப் பெற்றால் அழகுவரும்

அன்பு வேண்டுமே! அகத்தில்


அன்பு வேண்டுமே!

ஊக்கம் வேண்டுமா? – தம்பீ!

உடைமை வேண்டுமா?

ஊக்கம் பெற்றால் உடைமை வரும்


ஊக்கம் வேண்டுமே! – அகத்தில்

ஊக்கம் வேண்டுமே!

கல்வி வேண்டுமா? – தம்பீ!

செல்வம் வேண்டுமா?


கல்வி பெற்றால் செல்வம் வரும்

கல்வி வேண்டுமே, மனத்தில்

கல்வி வேண்டுமே!

உண்மை வேண்டுமா? – தம்பீ


திண்மை வேண்டுமா?

உண்மை பெற்றால் திண்மை வரும்

உண்மை வேண்டுமே! எனக்கு

உண்மை வேண்டுமே!


அன்பும் ஊக்கமும் கல்வியும்

உண்மையும் இருந்தால்

பின்பு தோன்றும் யாவையும்

நல்லவே தோன்றும்.

- தமிழறிஞர் அடிகளாசிரியர்

(அகம் – உள்ளம்; உடைமை – பொருள்: திண்மை – வலிமை)

வினாக்கள்

அன்பைப் பெற்றால் அழகு வரும்.

ஊக்கம் வந்தால் உடைமை வரும்.

செல்வம் கிடைக்க கல்வியைப் பெற வேண்டும்.

வலிமை கிடைக்க உண்மை பெற வேண்டும்.

நல்லவை அனைத்தும் கிடைக்க அன்பும், ஊக்கமும், கல்வியும், உண்மையும் இருக்க வேண்டும்.