ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.3 தெரிந்துகொள்வோம்

பெயரெச்சம்

உரையடாலில் வந்துள்ள எழுதிய கவிதைகள், சிறந்த பாடல்கள், மாறாத அன்பு தீராக்காதல் ஆகிய சொற்கள் பெயரெச்சங்கள் ஆகும்.

பெயரைக்கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம்.

வீட்டிற்கு வந்த எழிலனைப் பெற்றோர் வரவேற்றனர். இதில் வந்த எழிலன் என்பது இறந்தகால தெரிநிலைப் பெயரெச்சம்.
போட்டியில் பாடுகின்ற சிறுமி என் தோழி. இதில் பாடுகின்ற சிறுமி என்பது நிகழ்கால தெரிநிலைப் பெயரெச்சம்.
வானில் பறக்கும் பறவை கிளி. இதில் பறக்கும் பறவை என்பது எதிர்கால தெரிநிலைப் பெயரெச்சம்.
பிறந்தநாளுக்கு அழகிய பரிசு கிடைத்தது. இதில் அழகிய பரிசு என்பது குறிப்புப் பெயரெச்சம்.
பூங்காவில் இருப்பது ஓடாத குதிரை. இதில் ஓடாத குதிரை என்பது எதிர்மறைப் பெயரெச்சம்.
கல்வியே அழியாச் செல்வம் என்றார் ஆசிரியர். இதில் அழியாச் செல்வம் என்பது ஈறுகெட்ட எதிரிமறைப் பெயரெச்சம்.