ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.7 செந்தமிழ்ச்செல்வம்

நன்னெறி

உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்குசினம் காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க – வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு

- (பாடல் – 8)

- சிவப்பிரகாசர்

(உள்ளம் – மனம் ; குணம் – பண்பு ; தடங்கரை – பெரிய கரை ; விளம்பு – கூறு)

பொருள்

பொங்கிவரும் வெள்ளத்தைக் கரை கட்டித் தடுத்தல் அரிதா அல்லது கரையை உடைத்து வெள்ளத்தை விடுவது அரிதா? உள்ளத்திலிருந்து சீறி எழுகின்ற சினத்தைக் காத்துக்கொள்வதுதான் அரிது. ஆதலால், அத்தகைய சினத்தைக் காத்துக்கொள்வதே சிறந்த பண்பாகும்.

பழமொழி

மனம்போல வாழ்வு.

சொல்வதைக் கேட்டு எழுதுக

பண்பாடு என்பதற்குப் பண்படுத்துதல் என்று பொருள். பண்பட்ட மனம் நல்ல மனிதர்களுக்கு அடையளாம். மனம் பண்படும்போது நற்பண்புகள் உருவாகும். ஒருவருடைய மேன்மைக்கு அவருடைய நற்பண்புகளே காரணமாக அமைகின்றன.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. கண்காட்சி
  2. சுற்றுலா
  3. நட்பு