ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
விடை காண்போம்

கட்டுரைப் போட்டி தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் 10.05.2023 நடைபெறுகிறது.

மழை வளம் காப்போம், தமிழர் பண்பாடு, கல்வியின் சிறப்பு, எனது பள்ளி, ஒற்றுமையே உயர்வு போன்றவைக் கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்.

கட்டுரைப் போட்டியில் பங்கு பெறுவோருக்கான வயது வரம்பு 18 வயது முதல் 25 வரை.

தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கம்

போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.25,000; இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ:15,000, மூன்றாம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.10,000 என மொத்த பரிசுத் தொகையாக ரூ.50,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.