ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
11.5 கேட்டல் கருத்தறிதல்

விதை

அமெரிக்காவில், மாக்சிமோவிச் பிர்ச் என்னும் சாலையில் மரங்கள் நிறைந்திருந்தன. அம்மரங்களின் கீழே விதைகள் கொட்டிக் கிடந்தன. அவற்றைத் தன் சட்டைப் பையில் சேகரித்துக் கொண்டாள் மாயா. சேகரித்த விதைகளை நடந்து செல்லும் வழியில் ஆங்காங்கே தூவிக் கொண்டே சென்றாள். சில விதைகளை மண்ணில் ஊன்றினாள். சில விதைகளைத் தூரமாகத் தூக்கியும் எறிந்தாள். குறிப்பிட்ட இடத்தில்தான் விதைக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இல்லை. மனம் போன போக்கிலே விதைகளைப் பரப்பினாள். வீடு சேர்வதற்குள் சட்டைப் பையில் இருந்த விதைகள் தீர்ந்துபோயின.

வினாக்கள்

மரம் வளர்த்தல்

மாயா, சேகரித்த விதைகளை நடந்து செல்லும் வழியில் ஆங்காங்கே தூவிக் கொண்டே சென்றாள். சில விதைகளை மண்ணில் ஊன்றினாள். சில விதைகளைத் தூரமாகத் தூக்கியும் எறிந்தாள். குறிப்பிட்ட இடத்தில்தான் விதைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் மனம் போன போக்கில் விதைகளைப் பரப்பினாள்.

சாலையோரம் ஆங்காங்கே மரங்கள் வளர்ந்திருக்கும். மழை வளம் பெருகும். மரங்கள் காற்றில் உள்ள கரியமில வாயுவை உட்கொண்டு நாம் சுவாசிப்பதற்கான உயிர்க்காற்று தரும்.

மரங்களின் கீழே கொட்டி கிடந்த விதைகளைச் சேகரித்தாள்.

நிச்சயம் மாயாவைப் போல விதைகளைப் பலவிதங்களில் விதைக்க முற்படுவோம்.

தகவல்துளி

தமிழ்நாட்டில் சென்னை மெரினாக் கடற்கரையில் உழைப்பாளர் சிலை உள்ளது. தொழிலாளர்களின் உழைப்பை நினைவுபடுத்தும் வகையில், இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையைச் செய்தவர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி. இவர் சிறந்த ஓவியர்; சிலை வடிப்பதிலும் ஆர்வம் கொண்டவர்.