ழகரம்
(முதல் பருவம்)
எழுவாய் (Noun) ஒரு செயலைத் தானே செய்தால் அது தன்வினை.
எழுவாய் ஒரு செயலைச் செய்ய வைத்தால் அது பிறவினை.
| தன்வினை | பிறவினை |
கார்த்திகா ஓவியம் வரையக் கற்றாள். |
கார்த்திகா, தன் தோழிக்கு ஓவியம் வரையக் கற்பித்தாள். |
அரசர், அமைச்சரின் அறிவுரையைக் கேட்டுத் திருந்தினார். |
அமைச்சர் அறிவுரை கூறி, அரசரைத் திருத்தினார். |
அம்மா சோறு உண்டாள். |
அம்மா குழந்தைக்குச் சோறு உண்பித்தாள். |
வேலன், நகைச்சுவைக் கதையைப் படித்து மகிழ்ந்தான். |
வேலன், நகைச்சுவைக் கதையை நண்பனுக்குக் கூறி, அவனை மகிழ்வித்தான். |