ழகரம்
(முதல் பருவம்)
- (பாடல்- 1)
- ஔவையார்
(நன்றி - உதவி; தெங்கு – தென்னை)
தென்னை மரமானது, வேர்ப்பகுதியில் நீரைப் பெற்றுக்கொண்டு, சுவையான இளநீரைத் தலைப்பகுதியில் தருகிறது. அதுபோல, ஒருவருக்கு நன்மை செய்தால், அதனைப் பெற்றுக்கொண்டவர் எப்போது நமக்குத் திருப்பிச் செய்வார் என்று எதிர்பார்த்துச் செய்யக்கூடாது.
யானைக்கும் அடி சறுக்கும்
கல்லணை தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. இது உலகப் புகழ்வாய்ந்த பழம்பெரும் அணையாகும். இக்கல்லணை இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்டது.