ழகரம்
(முதல் பருவம்)
இசை, மனிதர்களின் நினைவுகளையும் நிகழ்வுகளையும் மீட்டெடுக்கிறது. பலரின் இரவுகளைத் தன் வசமாக்குகிறது. நெடுந்தூரப்பயணங்களில் நம்முடன் துணையாக வருவது இசையே.
இசையின் வடிவம் வேறாகலாம். திரையிசை, கருநாடக இசை, இந்துஸ்தானி, கஜல், நாட்டுப்புற இசை என எண்ணற்ற இசை வடிவங்கள் உள்ளன. உலக அளவில் ஒவ்வொரு நாட்டு மக்களும் தம் பண்பாட்டிற்கு ஏற்றவாறு பல்வேறு வகையான இசைகளை இசைத்து மகிழ்கின்றனர். ராக் இசை, சோல் இசை, பாப் இசை, டிஸ்கோ, சிம்ஃபொனி உள்ளிட்ட பல இசை வகைகள் உலக அளவில் புகழ்பெற்றுள்ளன. மனிதர்களின் வாழ்வில் தொடக்கம் முதல் இறுதிவரை இசையும் பயணம் செய்துகொண்டிருக்கிறது.
இசை, மனிதர்களின் நினைவுகளையும் நிகழ்வுகளையும் மீட்டெடுக்கிறது.
திரையிசை, கருநாடக இசை, இந்துஸ்தானி, கஜல், நாட்டுப்புற இசை என எண்ணற்ற இசை வடிவங்கள் உள்ளன.
ராக் இசை, சோல் இசை, பாப் இசை, டிஸ்கோ, சிம்ஃபொனி உள்ளிட்ட பல இசை வகைகள் உலக அளவில் புகழ்பெற்றுள்ளன.
மனிதர்களின் வாழ்வில் தொடக்கம் முதல் இறுதிவரை இசை பயணம் செய்து கொண்டிருக்கிறது.
நீங்கள் விரும்பும் இசையை எழுதவும்.
திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ‘ஆஸ்கர்‘. இந்த விருதைப் பெற்றவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர். இரகுமான். அவருக்கு, 2009ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படப் பின்னணி இசைக்காகவும் சிறந்த திரையிசைப் பாடலுக்காகவும் இரண்டு ஆஸ்கர் விருதுகள் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டன. அவருக்கு விருதைப் பெற்றுத் தந்த திரைப்படம், ‘ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire)‘. |
![]() ஏ.ஆர். இரகுமான் |