ழகரம்
(முதல் பருவம்)
ஒரு சொல்லுக்கும் மற்றொருசொல்லுக்கும் இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது வேற்றுமைத்தொகை (தொகை – மறைந்து வருதல்)
இரண்டாம் வேற்றுமை உருபு முதல் ஏழாம் வேற்றுமை உருபு வரை ((ஐ, ஆல், கு, இன், அது, கண், இல்) மறைந்து வரும்.
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை.
|
கயல்விழி தண்ணீர் குடித்தாள். |
இரண்டாம் வேற்றுமைத்தொகை (தண்ணீர் + ஐ = தண்ணீரை) |
|
எழிலி தலை வணங்கினாள். |
மூன்றாம் வேற்றுமைத்தொகை (தலை + ஆல் = தலையால்) |
|
கவின் நண்பன் கபிலன். |
நான்காம் வேற்றுமைத்தொகை (கவின் + கு = கவினுக்கு) |
|
மக்கள் மலை வீழ் அருவி கண்டு மகிழ்ந்தனர். |
ஐந்தாம் வேற்றுமைத்தொகை (மலை + இன் = மலையின்) |
|
காற்றில் மரக்கிளை ஆடியது. |
ஆறாம் வேற்றுமைத்தொகை (மரம் + அது = மரத்தினது) |
|
அம்மா வீட்டின்கண் நிற்கிறாள் |
ஏழாம் வேற்றுமைத்தொகை (வீடு + இல் = வீட்டில்) |