ழகரம்
(இரண்டாம் பருவம்)
வேடன் ஒருவன் காட்டிற்குச் சென்றான். எங்குத் தேடியும் ஒரு விலங்கும் அவன் கண்ணில் படவில்லை. களைப்பின் மிகுதியால் அங்கிருந்த ஆற்றங்கரை ஓரம் சிறிது ஓய்வெடுத்தான். அப்போது பறவை ஒன்று ஆற்றிலிருந்து ஒரு மீனைக் கவ்விக்கொண்டு பறந்தது. அதனைக் கண்ட வேடன், உடனே அம்பைக் கொண்டு அதனை வீழ்த்தினான். அந்தப் பறவை அடிபட்டுக் கீழே விழுந்தது. ஆயினும், மெதுவாகப் பறந்து சென்றது. அதனைப் பின்தொடர்ந்து அந்த வேடனும் சென்றான். அவ்வளவு வலியிலும் அந்தப் பறவை தன் அலகில் கௌவியிருந்த மீனைக் கீழே விடவில்லை. அது மெதுவாகப் பறந்து சென்று, அருகிலிருந்த மரத்தின் கூட்டில் அந்த மீனைப் போட்டது. அடுத்த நொடியில், அந்தப் பறவை கீழே விழுந்தது. அங்கு வந்த வேடன், அந்தப் பறவையைக் கையில் எடுத்தான். அது அசைவற்றுக் கிடந்தது. அம்பினால் அடிபட்ட பின்பும் இந்தப் பறவை ஏன் மீனைக் கீழே விடவில்லை? அதை எங்குக் கொண்டு சென்றது? என அந்த வேடன் எண்ணினான். அவன் நின்றிருந்த இடத்தில் கீச், கீச் என ஒலி வந்ததைக் கேட்டான். நிமிர்ந்து பார்த்தான். அந்த மரத்தின் உச்சியில் ஒரு கூடு இருந்தது. மரத்தின் மீது ஏறி அந்தக் கூட்டின் அருகில் சென்றான். அங்கு நான்கு குஞ்சுப் பறவைகள் அந்த மீனைக் கொத்திக்கொண்டிருப்பதைக் கண்டான். தரையில் வீழ்ந்து கிடந்த அந்தப் பறவையைப் பார்த்தான். அதன் தாய்மை உள்ளத்தைக் கண்டு பெருமிதம் கொண்டான். அதே நேரத்தில், அந்தப் பறவையின் இறப்புக்குத் தான் காரணமாகிவிட்டதை எண்ணி மிகவும் மனம் வருந்தினான்.
வேடன் காட்டில் விலங்கைத் தேடி காடு முழுவதும் சுற்றித் திரிந்ததால். மிகவும் களைப்படைந்தான்.
பறவையைக் கண்ட வேடன், உடனே தன் கையிலிருந்த அம்பைக் கொண்டு அதனை வீழ்த்தினான்.
தன் குஞ்சுகளுக்கு அதன் வாயில் இருந்த மீனைக் கொடுப்பதற்காக பறந்து சென்றது.
வேடன், மரத்தின் உச்சியில் உள்ள ஒரு கூட்டில் நான்கு குஞ்சுப்பறவைகள், அடிபட்ட பறவை போட்ட மீனைக் கொத்திக் கொண்டிருப்பதைக் கண்டான்.
பறவையின் தாய்மை உள்ளத்தைக் கண்டு வேடன் பெருமிதம் கொண்டான்.
அவலோகிதம் (Tamil Prosody Analyzer) என்பது தமிழ் யாப்பு மென்பொருள் ஆகும். ஒரு செய்யுளை உள்ளீடு செய்தால் அதன் சீர், வாய்ப்பாடு, தளை, அடி முதலிய யாப்பு அமைப்புகளைக் கண்டறியும். அந்தச் செய்யுளின் பாவகை அறிந்து தெரிவிக்கும். இந்த மென்பொருள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களையும் அவற்றின் இனங்களையும் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைத்தவர் வினோத்ராஜன் என்னும் பொறியாளர். |