ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 22
22.5 கேட்டல் கருத்தறிதல்

மலர்க்கொத்து

பெர்னாட்ஷாவிற்கு மலர்கள் என்றால் அதிகம் பிடிக்கும். செடி கொடிகளிலும், மரங்களிலும் பூத்துக் குலுங்கும் மலர்களைப் பார்த்து இரசித்து வியந்து கொண்டிருப்பார். எனினும், அவர் தமது இல்லத்தில் மலர்களைக் கொய்து அலங்காரப் பூச்சாடிகளில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்.

இது குறித்து ஒருநாள், நண்பர் ஒருவர் ஷாவிடம், “மலர்களிடம் இவ்வளவு பிரியம் வைத்துள்ள நீங்கள் அவற்றைக் கொய்து வீட்டில் வைப்பதில்லையே, ஏன்?” எனக் கேட்டார்.

அதற்கு பெர்னாட்ஷா, “மலர்களிடம் எனக்குப் பிரியம்தான். அவற்றைப் பார்த்து இரசிக்கலாம். பறித்துத்தான் இரசிக்க வேண்டும் என்பதில்லையே! ஒவ்வொன்றும் அது இருக்கும் இடத்தில்தான் உண்மையான அழகைப் பெறும்” என்று விடையளித்தார்.

வினாக்கள்

மலர்கள்

செடி கொடிகளிலும், மரங்களிலும் பூத்துக்குலுங்கும் மலர்களைப் பார்த்து இரசித்து வியந்து கொண்டிருப்பார்.

பெர்னாட்ஷா தமது இல்லத்தில் மலர்களைக் கொய்து அலங்காரப் பூச்செடிகளில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்.

நண்பர் பெர்னாட்ஷாவிடம், “மலர்களிடம் இவ்வளவு பிரியம் வைத்துள்ள நீங்கள்அவற்றைக் கொய்து வீட்டில் வைப்பதில்லையே, ஏன்?” எனக் கேட்டார்.

பெர்னாட்ஷா, “மலர்களிடம் எனக்குப் பிரியம் தான். அவற்றைப் பார்த்து இரசிக்கலாம். பறித்துதான் இரசிக்க வேண்டும் என்பதில்லையே! ஒவ்வொன்றும் அது இருக்கும் இடத்தில்தான் உண்மையான அழகைப் பெறும்” என்று நண்பருக்கு விடையளித்தார்.

தகவல் துளி

பழந்தமிழர் விளையாட்டுகளுள் பாவையை வைத்து மகளிர் விளையாடுதலும் ஒன்றாகும். ‘பாவை‘ என்பது, பொம்மையைக் குறிக்கும் சொல்லாகும். மண்ணாலான பாவை, மரத்தாலான பாவை போன்றவை விளையாடுவதற்குப் பயன்பட்டன. அக்காலத்திலேயே இயந்திரத்தால் செய்யப்பட்ட இயந்திரப்பாவையும் வழக்கத்தில் இருந்தது என்பது வியப்பிற்குரிய செய்தியாகும். தானே இயங்கும் இயந்திரத் தொழில்நுட்பத்துடன் இத்தகைய பாவை வடிவமைக்கப்பட்டிருந்தது. நல்ல வேலைப்பாடமைந்த தானே இயங்கும் இயந்திரப்பாவையின் இயந்திரம் பழுதுபட்டதால், அது இயங்காமல் கிடந்தது என்பதை “நல்வினைப் பொறி அழி பாவையின் கலங்கி“ என்னும் நற்றிணைப் பாடல் (பா. 308, வரி 6, 7) உணர்த்துகிறது.