ழகரம்
(இரண்டாம் பருவம்)
உடல் உறுப்புகளைச் சேமித்து வைக்கும் இடத்தை உயிர் காக்கும் வங்கி என்பர்.
மனிதன், தன் தேவைகளை மொழியின் மூலம் பெறுகிறான். இதன் அடிப்படையில் மொழிகற்றல், திறம்பட கையாளுதல் ஆகியவை உற்றுநோக்கப்படுகின்றன. இவற்றை அறிந்து கொண்டு கணினிக்கு அளிக்கும் வழிமுறைகள் ஆராயப்படுகின்றன. இதனையே இயற்கைமொழி ஆய்வு என்கிறோம்.
மண்ணில் புதையுண்ட பண்டைய நாகரிகச் சின்னங்களைத் தோண்டியெடுத்து மனிதன் வாழ்ந்த காலத்தையும் அவனது பண்பாட்டையும் ஆராய்வது அகழாய்வு என்பர். இந்தியாவில் முதல் அகழாய்வு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்டது.
காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பை மட்டும் உணர்த்துவது குறிப்புப்பெயரெச்சம் எனப்படும். எ.கா: பெரிய மலை; அழகிய ஓவியம்
மக்கள் தம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய இன்றியமையாத பண்பு ஒழுக்கம். அவ்வொழுக்க நெறியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துவதே ’அறம்’ என்பர்.