ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 25
25.5 கேட்டல் கருத்தறிதல்

உணவே மருந்து

உடல் எடை குறைய, உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்கவேண்டும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு, சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் ஆகியவை உதவுகின்றன. இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். இதனால், விரைவிலேயே உடலிலுள்ள கொழுப்பு குறைந்து, உடல் அழகான வடிவத்தைப் பெறும். சுரைக்காய் வயிற்றுச் சதையைக் குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால், சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டுச் சாறும் அறுகம்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கின்றன. மேலும், நாம் நாள்தோறும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும்.

வினாக்கள்

கொழுப்பு நிறைந்த உணவை உண்பதால் உடல் எடை கூடுகிறது.

பூண்டு, வெங்காயம்.

சோம்பு கலந்த தன்ணீரைக் குடித்தால், விரைவிலேயே உடலுள்ள கொழுப்பு குறைந்து விடும்.

சுரைக்காய் வயிற்றுச் சதையைக் குறைக்கப் பயன்படுகிறது.

நடைப்பயிற்சி, உடற்பயிற்சி

தகவல் துளி

ஆஸ்திரியாவைச் சேர்ந்த கார்ல் லாண்ட்ஸ்டீனர் (Karl Landsteiner) என்ற உயிரியல் வல்லுநரும் மருத்துவரும் ஆன இவர் இரத்தத்தின் வகைகள் எத்தனை என்பதைக் கண்டறிந்தார். மனித உடலில் காணப்படும் இரத்த வகைகளைப் பிரித்து முதன் முதலில் அறிவித்தவர் இவரே. எனவே இவருடைய பிறந்தநாளான ஜுன் 14, உலக இரத்த தானமளிப்போர் நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆய்விற்காக கார்ல் லாண்ட்ஸ்டீனருக்கு 1930ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.