ழகரம்
(இரண்டாம் பருவம்)
சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும் போது க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்கள் மிகுந்து வரும். இவ்வாறு வருவன வல்லினம் மிகும் இடங்களாகும்.
வல்லினம் மிகும் இடங்களில் க்,ச்,த்,ப் ஆகிய மெய் எழுத்துகள் இடம் பெறுகின்றன.
வல்லின மெய்களை மிகுத்து எழுதுவதற்கு விதிகள் உள்ளன. அவற்றுள் விதி 2: அந்த, இந்த, எந்த என்னும் சுட்டுத்திரிபுகள் பின் வல்லினம் மிகும்.
எ.கா: எந்தப்பக்கம்; அந்தக்காகம்
காகத்தின் தந்திரம்
விதி – 4 இரண்டாம் வேற்றுமை விரியில் (ஐ) வல்லினம் மிகும்.
எ.கா: பானையைக் கண்டுபிடித்தது. இளநீரைக் குடிப்பதற்கு.