ழகரம்
(முதல் பருவம்)
தமிழிலுள்ள ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை. சிலப்பதிகாரத்தின் கதை மாந்தர்களான கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வாழ்வை விளக்கும் காப்பியம் இது.
அன்பும் அருளும் நிறைந்த மணிமேகலை பலருடைய போற்றுதலுக்கு உரியவளாய் விளங்கினாள். மேலும் அவள் தன் வாழ்வில் தான் பெற்ற அட்சயப்பாத்திரத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கும் பசித்தவர்களுக்கும் உணவு அளித்த ஒரு நிகழ்வை இங்கு படக்கதையாகக் காணலாம்.
| மணிமேகலை | : | யார் நீங்கள்? நான் எங்கு இருக்கிறேன்? | |
| மணிமேகலா தெய்வம் | : | அச்சப்படாதே மணிமேகலை. உன்னைப் பாதுகாக்கவே இங்கே தூக்கிவந்தேன். இப்போது உனக்கு மயக்கம் தெளிந்துவிட்டது |
(மணிமேகலைக்கு அவளது முற்பிறவி பற்றிய செய்திகளை மணிமேகலா தெய்வம் கூறிவிட்டுச் செல்கிறது.)
| மணிமேகலை | : | அம்மா, நீங்கள் யார்? | |
| தீவதிலகை | : | என் பெயர் தீவதிலகை. நான் இங்குள்ள புத்தபீடிகையைக் காவல் காத்து வருகிறேன். புத்தபீடிகையின் முன்னால் கோமுகி என்னும் குளம் உள்ளது. நீ அங்குச் செல். இன்று வைகாசித் திங்கள் முழுமதி நாள். குளத்தில் மூழ்கியுள்ள அமுதசுரபி என்னும் அட்சயப்பாத்திரம் இன்று நீருக்கு மேலே வரும். அப்பாத்திரத்தை எடுத்துக்கொள். | |
| மணிமேகலை | : | அட்சயப்பாத்திரமா? | |
| தீவதிலகை | : | ஆம். அந்த அட்சயப்பாத்திரத்தில், நற்பண்புமிக்க ஒரு பெண்ணிடமிருந்து முதன்முதலில் உணவைப் பெறவேண்டும். பின்னர், அப்பாத்திரத்தில் அள்ள அள்ளக் குறையாமல் உணவு வந்துகொண்டே இருக்கும். அதனைக்கொண்டு, நீ வறுமை உற்றவர்களின் பசியைப் போக்கவேண்டும். பசித்துயரத்தின் கொடுமையை நீக்கவேண்டும். | |
| மணிமேகலை | : | அப்படியே செய்கிறேன். |
| மணிமேகலை | : | அம்மா, உங்கள் கையால் உணவு அளியுங்கள். | |
| ஆதிரை | : | இதோ தருகிறேன். பெற்றுக்கொள்ளுங்கள். |
ஆதிரையிடமிருந்து உணவைப் பெற்றபின் அப்பாத்திரத்தில் அள்ள அள்ள உணவு குறையாமல் வருகிறது.
| ஒருவர் | : | அம்மா, உங்கள் கையால் உணவு அளியுங்கள். | |
| மற்றொருவர் | : | அதிலென்ன சிறப்பு? | ஒருவர் | : | அப்பெண்ணின் கையிலுள்ள பாத்திரம்தான் சிறப்பு. |
| காவலர் - 1 | : | என்னே புதுமை ! | |
| காவலர் – 2 | : | என்ன புதுமையைக் கண்டீர்? | காவலர் – 1 | : | அதோ, அங்கு உணவு அளிக்கும் அப்பெண்ணின் கையிலுள்ள பாத்திரத்தைப் பாருங்கள். எத்தனை பேர் உணவு கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உணவு வந்துகொண்டே இருக்கிறது. |
| காவலர் – 2 | : | ஆமாம். அப்படியென்றால் அது ஓர் அட்சயப்பாத்திரமாக இருக்க வேண்டும். அள்ள அள்ள குறையாமல் உணவு வருகிறது அல்லவா! |
மணிமேகலை அட்சயப்பாத்திரத்தின் உதவியால் ஏழை, எளியவரின் பசிப்பிணியை நீக்குகிறாள். அவர்களின் பசித்துன்பத்தை நீக்கி உணவளிக்கிறாள். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே“ என மணிமேகலைக் காப்பியத்தில் சிறப்பிக்கப்படுகிறாள்.
| 1. | தீவு | - | நான்குபுறமும் நீரால் சூழப்பட்டபகுதி | ||
| 2. | பிணி | - | நோய் | ||
| 3. | அமுதசுரபி | - | அள்ள அள்ளக் உணவுக் குறையாமல் தரும் ஒரு பாத்திரம் | ||
| 4. | பொய்கை | - | குளம் | ||
| 5. | வைகாசித் திங்கள் | - | வைகாசி மாதம் | ||
| 6. | புத்தபீடிகை | - | புத்தரின் பாதம் படிந்த இடம் | ||
| 7. | உண்டி | - | உணவு |
தீவதிலகை, அட்சயப் பாத்திரத்தைக் கொண்டு நீ வறுமை உற்றவர்களின் பசியைப் போக்க வேண்டும்; பசித்துயரத்தின் கொடுமையை நீக்க வேண்டும் என்று மணிமேகலையிடம் கூறினாள்.
மணிமேகலைக்கு அட்சயப் பாத்திரம் புத்த பீடிகையின் முன்னாள் உள்ள கோமுகி என்னும் குளத்தில் கிடைத்தது.
அட்சயப் பாத்திரத்தில் உள்ள உணவு அள்ள அள்ள குறையாமல் வந்து கொண்டே இருக்கும்.
அட்சயப் பாத்திரத்தைக் கொண்டு மணிமேகலை எல்லாருக்கும் உணவு அளித்தாள்.
மணிமேகலை அட்சயப் பாத்திரத்தின் உதவியால் ஏழை, எளியவருக்கு உணவளித்து அவர்களின் பசிப்பிணியை நீக்குகிறாள். இதனால் மணிமேகலை “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என மணிமேகலைக் காப்பியத்தில் சிறப்பிக்கப்படுகிறாள்.