ழகரம்
(முதல் பருவம்)
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன்; பசியினால் இளைத்தே
வீடுதோறும் இரந்தும் பசி அறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்;
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர் உறக்கண்டு உளந் துடித்தேன்;
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
– (பாடல் 3471)
– இராமலிங்க அடிகள்
(வாடினேன் - வருந்தினேன்; இரந்தும் - யாசித்தும்; அயர்ந்த – களைத்த)
சநீர் இல்லாமல் வெயிலில் வாடிய பயிரைப் பார்த்தபோதெல்லாம் வாடினேன். பசியினால் இளைத்து, உடல் மெலிந்து, வீடுதோறும் யாசித்தும், பசி தீராமல் சோர்ந்து ஒன்றும் இல்லாதவர்களைக் கண்டு உள்ளம் வருந்தினேன். நீண்ட நாள் நோயால் வருத்தப்படுகிறவர்கள், என் முன்னால் வரும்போது, அவர்களைப் பார்த்தும் உள்ளம் துடித்தேன். பசியால் துன்பப்பட்டாலும் மற்றவர்களிடம் சென்று உதவி கேட்காத ஒப்பில்லா மானம் உடையவர்களையும் ஏழைகளையும் கண்டு நானும் இளைத்தேன் என இராமலிங்க அடிகள் கூறுகிறார். இப்பாடல், உயிர் இரக்கத்தின் தேவையை உணர்த்துகிறது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
1945ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபை உணவு மற்றும் வேளாண்மை என்னும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தை தொடங்கியது. இந்நாளை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16ஆம் நாள் உலக உணவு நாளாகக் கொண்டாடப்படுகிறது.