ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
பயிற்சி - கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை எழுதுக

ஒருவர் நேரே கூறுவது போல் இருப்பது நேர்கூற்று எனப்படும். எ.கா: “முகிலா, நான் நாளை ஊருக்குச் செல்கிறேன்” என்று கண்ணன் கூறினான்.

ஒருவர் நேரே கூறியதைப் படர்க்கையில் மாற்றிக் கூறுவது அயற்கூற்று எனப்படும். எ.கா: தான் அடுத்தநாள் ஊருக்குச் செல்வதாக கண்ணன் முகிலனுக்குக் கூறினான்.

நாளை - மறுநாள்
இப்பொழுது - அப்பொழுது
இதனால் - அதனால்
நான் - தான்
நீ – அவன், அவள்

4. அன்று - இன்று
மறுநாள் - நாளை
அது - இது
அவை - இவை
அவர்கள் – நீங்கள்

நேர்கூற்றை அயற்கூற்றாக மாற்றும் போது கவனிக்க வேண்டியவை: நேர்க்கூற்றிலுள்ள மேற்கொள்குறி, காற்புள்ளி, என்று, என என்ற செய்தியை முடிக்கும் சொற்கள் ஆகியவற்றை நீக்குக. முன்னிலையில் உள்ளதைத் தன்மையாகவோ, படர்க்கையாகவோ மாற்றுக. கட்டளைச் சொல்லோடு ‘மாறு’, ‘ஆக’ என்ற சொற்களைச் சேர்த்து விடுக. (எ.கா: படிக்குமாறு, எழுதுவதாக)