சிகரம்
(முதல் பருவம்)
கீழ்க்காணும் பாடலைப் படித்து, வினாக்களுக்கு விடை கூறுக.
பச்சைக் கம்பளம் விரித்தாற்போல்
பாரில் வளரும் பசும்புல்லே!
இச்சை மிகவே எங்கெங்கும்
எழில்பெறப் பரவும் வகையென்ன?
பூமித்தாயின் பொன்னுடம்பைப்
போர்த்துக் காக்கும் போர்வையென
நீமிக் கெங்கும் நிறைந்தனையோ?
நேசங் கொள்ள வளர்புல்லே!
- இளங்குமரன்
பச்சை கம்பளம்
அழகு
நிலம்
பசும்புல்
பூமி, பார்த்தல்
நெய்தல் நிலக்காட்சியைப் படமாக வரைந்து, வகுப்பில் காட்சிப்படுத்துக.