சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

13.9 உயர்நிலைத்திறன்

பின்வரும் பாடலைப் படித்து, அதன் நயங்களைக் (பொருள், ஒலி, கற்பனை) கூறுக.

(தாய் தன் குழந்தையைச் சீராட்டிப் பாராட்டி வளர்ப்பதைக் கூறும் நாட்டுப்புறப் பாடல்)
பந்தலிலே தூங்க வைத்தால்
பல தோஷம் தாக்கும் என்று
சந்திலே தூங்க வைத்தால்
சாரல் அடிக்கும் என்று
தொட்டிலிலே தூங்க வைத்தால்
தூக்கம் கலையும் என்று
பூமியிலே நடக்க விட்டால்
புழுதி படியும் என்று
தோள்மேலே தூளி கட்டித்
தொடைமேலே நடைபழக்கி
மார்மேலே தூங்க வைத்து
மடிமேலே தவழ விட்டேன்
சங்காலே பால் வார்த்தால்
சமர்த்துக் குறையும் என்று
இரும்பாலே பால் வார்த்தால்
எழுத்துக் குறையும் என்று
வெள்ளியால் பாலாடை
விலை போட்டு வாங்கிவந்தேன்
வெள்ளியும் வேண்டா என்று
விரலாலே அள்ளி விட்டேன்

- தமிழக நாட்டுப்பாடல்கள், மு.வை. அரவிந்தன்.

13.10 செயல்திட்டம்

தமிழகத்தில் நடைபெறும் நாட்டுப்புறக் கலைகளுள் ‘பொய்க்கால் குதிரை ஆட்டம்’ பற்றிய செய்திகளைப் படங்களுடன் தொகுத்து எழுதி வருக.