சிகரம்
(இரண்டாம் பருவம்)
கீழ்க்காணும் பாதிக்கதையைப் படித்து, மீதிக்கதையைக் கூறுக. கதைக்குப் பொருத்தமாகத் தலைப்பு ஒன்றும் தருக.
இனியா அடிக்கடி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய தோழிகளின் ஆரவாரம் வீடு முழுவதும் எதிரொலித்தது. சிறிதும் பெரிதுமாகப் பல வண்ண அட்டைப்பெட்டிகள். ஒவ்வொன்றிலும் ஒரு பரிசு இருந்தது. மகிழ்ச்சியுடன் பிறந்நாளைக் கொண்டாட வேண்டிய இனியா, மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டாள். அவளுடைய வருத்தத்திற்கான காரணத்தை அறிய விரும்பினாள் கண்மணி. இனியாவிடமே அதைப் பற்றிக் கேட்டாள், அதற்கு அவள், ”இளமதியும் இன்று வருவதாகக் கூறினாள். அவள் வரவில்லையே என்றுதான் வருந்துகிறேன்” என்றாள். அவள் கூறி முடிப்பதற்குள், அங்கு இளமதி ஓடி வந்தாள். அவளைப் பார்த்ததும் இனியாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. இளமதி அவள் கைகளைக் குலுக்கி, இனியாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாள். இளமதி வெறுங்ககையுடன் வந்திருப்பதை மற்ற தோழிகள் எல்லோரும் பார்த்தனர். தங்களுக்குள் கூடிக் கூடிப் பேசினர். மற்றவர்கள் தன்னைப் பார்ப்பதைப் புரிந்துகொண்ட இளமதி தலைகுனிந்தாள். இனியா தோழிகளின் செயலைக் கண்டாள். அப்போது......
ஏதேனும் ஒரு திருக்குறளை அடிப்படையாக வைத்துக் கதை ஒன்றை எழுதி வருக.