| அஃகுதல் - சுருங்குதல் | 
71 | 
அஃறிணைவிரவுப்பெயர் - உயர் திணைப்பெயரோடு அஃறிணை சென்று விரவியபெயர் | 
156 | 
அகக்கருவி - அஃதாவது : செய் கைப்படுதற்குரிய நிலைமொழி யீறுபற்றியேனும், 
வருமொழி முதல்பற்றியேனும் வரும் எழுத்து விதிகளைக் கூறுவது | 
28 | 
அகச்செய்கை - அஃதாவது : நிலைமொழியீறு இன்ன இன்னவாறு முடியுமெனக் கூறுவது | 
28 | 
| அகத்தோத்து - அகச்செய்கைக் குரிய இயல் | 
145 | 
| அகப்பட - அடங்கும்படி | 
10 | 
| அகப்பாடு - உள்ளடங்கியது | 
47 | 
அகப்புறக்கருவி - அஃதாவது : புணர்ச்சி யிலக்கணமும், புணர்ச்சிக்குரிய 
திரிபுகளிவை யென்பதும், இயல்பும், புணர்ச்சி வகையும், நிலைமொழிகள் 
செய்கைவிதியிற் பெறுஞ் சாரியைகள் வரு மொழியோடு புணருங்கால் அடையுந் 
திரிபுகளுமாகிய இருமொழிகளும் செய்கைப் படுதற்கேற்றவாய்வரும் விதிகளைக் கூறுவது | 
28 | 
அகப்புறச்செய்கை - அஃதாவது : நிலைமொழியீறுபெறும் முடிபன்றி, நிலைமொழியீறு 
பெற்றுவரும் எழுத்து முதலியற்றின் முடிபு கூறுவது | 
28 | 
| அகல - விரிய | 
28 | 
| அங்கதம் - வசைச்சொல் | 
20 | 
| அங்காத்தல் - வாயைத் திறத்தல் | 
101 | 
| அசைத்தல்-எதிர்முகமாக்கல் | 
66 | 
| அசைநிலையாந்தன்மை - அசை நிலையாமியல்பு | 
72 | 
| அஞ்ஞை - தாய் | 
94 | 
| அடை - அடுத்துவருஞ்சொல் | 
117 | 
| அண்ணம் - மேல்வாய் | 
31 | 
| அண்பல் - மேல்வாய்ப்பல் | 
102 | 
| அணரி - மேனோக்கி | 
105 | 
| அணருதல் - மேனோக்கல் | 
105 | 
| அணல் - தாடி | 
161 | 
| அணி - அணியவிடம் | 
215 | 
| அத - ஒரு மரம் | 
192 | 
| அதங்கோடு - ஓரூர் | 
1 | 
| அதிகாரம் - தலைமைமுறைமை | 
49 | 
| அதோளி - அவ்விடம் | 
163 | 
| அதோள் - அவ்விடம் | 
306 | 
அப்பான்மொழி - அப்பகுதி யானமொழி; என்றது, ஒற்று மிகத்தோன்றாத மொழிகளை. 
அல்வழி என்றதனால், ஒற்று மிகத்தோன்றாதமொழி என்பது பெறப்படும் | 
187 | 
| அப்பு - நீர் | 
62 | 
| அரா - பாம்பு | 
206 | 
| அரில் - குற்றம் | 
108 | 
| அருகல் - அரிதாய்வரல் (சிறுபான்மை) | 
50 | 
| அருத்தாபத்தி - பொருட்பேறு | 
202 | 
| அருவாளர் - அருவாள தேயத்தார் | 
11 | 
| அரை - ஒரு மரம் | 
239 | 
| அலகு - எண் | 
44 | 
| அலகுபெறல் - அசைக்குரிய எழுத்தாக எண்ணப்பெறல் | 
44 | 
| அவ் - அவை | 
45 | 
| அவயவி - அவயவத்தை யுடையது | 
10 | 
| அவா - ஆசை | 
243 | 
| அழன்புழன் - வழக்குவீழ்ந்த சொற்கள் | 
99 | 
| அழன் - பிணம் | 
99 | 
| அழான்புழான் - அக்காலத்து வழங்கியஇயற்பெயர்கள் | 
282 | 
| அளவு - மாத்திரை | 
25 | 
அன்றியனைத்தும் - அவ்வனைத்தும், அகரச்சுட்டுத் திரிந்து அன்றி என நின்றது | 
146 | 
| அனுவதித்தல் - வழிமொழிதல் | 
48 | 
| அனையனல்லோன் - அத் தன்மையனல்லோன் | 
6 |