iv
இயக்கத்திற்காகவும் போராடியவர்; வ.உ.சி. உருவாக்கிய ‘சுதேசிக் கப்பல்’ கம்பெனியின் செயலராகவும் இருந்தவர்; காங்கிரசு மாநாடுகளும் கூட்டியவர்;தீண்டாமை ஒழிப்பு இயக்கத்திலும் முன்னின்றவர்! இப்பணிகளுக்கெல்லாம் தலைமையானதாக இவர் ஆற்றிய அரும்பணி ஒன்று உண்டு;அதுவே, இத் தமிழ்நாட்டில் கட்டாயப் பாடமாக ‘இந்தி’ கொணரப்பட்டபோது, தம் பேச்சாலும் எழுத்தாலும் வீறுகொண்டு எதிர்த்த தீரச் செயலாகும்!இவர் தோற்றுவித்த இக்கிளர்ச்சி, பின்னர் அரசியல் கிளர்ச்சியாக மாறி, அதனால் ஆட்சியே மாறும் நிலையும் ஏற்பட்டது என்னும் வரலாற்றை யாரும் மறந்துவிட முடியாது! இவ்வாறு தமிழ்மொழி - தமிழினம் தம்நாட்டு விடுதலை இம்மூன்றினுக்கும் பாடுபட்டவர் நாவலர் பாரதியார்! இவரெழுதிய நூல்களனைத்தையும் மறு பதிப்பாகக் கொண்டுவரவும், இதன்மூலம் நாவலர் பாரதியாரின் ஆராய்ச்சி எனும் அரிய கருவூலங்களை உலகத்து நல்லறிஞர் பலரும் பெற்றுத் தண்டமிழின் மேலாந் தரத்தை அறிந்து கொள்ளவும் வேண்டும் என எண்ணினோம். நாவலர் பாரதியாரோடும் எங்கள் குடும்பத்தோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவரும், ‘நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி’ என்னும் பொருள் குறித்து ஆராய்ந்து, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் ‘முனைவர்’ப் பட்டமும் (பிஎச்.டி) பெற்றவருமான திரு ச. சாம்பசிவனார் முன்பே, நாவலர் பாரதியார் நூல்களை வெளிக் கொணர்ந்த அனுபவமும் உடையவராதலின், இப்போது நாங்கள் வெளியிடவிருக்கும் நூல்களைப் பதிப்பித்துத் தருமாறு வேண்டிக் கொண்டதற்கிணங்க அவரும் இசைந்து, இப்பதிப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். இப்போது, ‘நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி’ எனும் தலைப்பில் அனைத்து நூல்களையுமே வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.இவ்வரிசையில், ‘தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை’ எனும் இந்நூல், இரண்டாம் தொகுதியாம்! இதன்கண், முன்னரே வெளிவந்த மூன்று இயல்கள் மட்டுமன்றி, இதுகாறும் நூல்வடிவில் வாராத சில இயல்களின் |