xvi
கொள்கைகளாதலின், அவை இயற்றமிழ் நூலில் இடம் பெறற்கில்லை!”
என்பது மறுப்புரையின் சுருக்கமாகும்! தொல்காப்பியப் பொருளதிகாரத்து ஒன்பது இயல்களில் ‘அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல்’ எனும் இம்மூன்றனுக்கும், நாவலர் பாரதியாரே முறையான புத்துரை எழுதி, நூல்களாக வெளியிட்டுப் பலர்க்கும் வழங்கினார்;அவரது மறைவுக்குப் பின்னர், இவை மறுபதிப்பாக வெளிவந்தன! ஆனால், நாவலர் பாரதியார், ‘களவியல், கற்பியல், செய்யுளியல் முதலானவற்றில், இன்றியமையாச் சில நூற்பாக்களுக்குப் புத்துரை கண்டு, அவ்வப்போது பல்வேறு இதழ்களில் எழுதிவந்ததுமுண்டு! யான், ‘முனைவர்’ப் பட்ட ஆராய்ச்சிக்காகப் பல்வேறு இடங்களுக்கும் சென்றபோது, இத்தகு உரைகளைப் ‘புதையல்’ போல் காண நேர்ந்தது.எனக்குக் கிடைத்தவற்றைத் தொகுத்து வைத்திருந்தேன்.அவை, இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. ‘களவியலி’ல், “இன்பமும் பொருளும் அறனுமென் றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டம் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோ ரியல்பே” (களவி : 1) என்பது முதல் நூற்பா.இதற்கு நாவலர் பாரதியார் கூறும் நயவுரை வருமாறு : “இதில், ‘காமம்’ ஆசை சுட்டும் வடசொலன்று; அன்புப்பொருளுடைத் தமிழ்ச் சொல்லாகும்.அன்பை அதாவது காதலைக் குறிக்கும்.இவ்வியலிலேயே ‘காமத்திணையில்’ எனக் காமத்தை ஒழுக்கத்தொடு சேர்த்துக் கூறுதலானும், ‘காமஞ் சான்ற’ எனக் கற்பியலில் கூறுதலானும், இழிதருகாமம் ஒழிய விலக்கி, மேதகு கடவுட் காதலையே காமத்தமிழ்ச்சொல் கண்ணுதல் தேற்றம். . . .இனி, வடவர் உவந்துழிக் கூடி உவந்துழிப் பிரியும் கந்தருவக் கூட்டம், பிரிவறு பெட்பா லுயிரொன்றிக் கூடி, மணமாய் |