உணர்த்தல், எல்லோருடைய நிலையாமையையும் தெரிவிக்கும்மயானத்தை வாழ்த்தல் என்பன இப்பகுதிக்கு உரியனவாம். முல்லைப்பொதுவியற்பால தலைவன் தலைவியோடு அளவளாவிய இன்பத்தைக்கூறுதல், பாசறையிலுள்ள தலைன்வருவதற்குமுன் தோன்றிய மேகத்தைக் கண்டு தலைவி துயரத்துடன் சொல்லுதல், பகைவரோடு போர்செய்யச் சென்ற தலைவன் அவர் திறைகொடுப்பஅதனைப் பெற்றுக் கொண்டு தேரில் வரும்பொழுது அத்தேரின்வரவைச் சிறப்பித்தல், தலைவன்போர்க்குப் பிரிந்த பின்னர்த் தலைவி நாணே காவலாகத்தனித்திருத்தல், தலைவி தன் கணவனை வாழ்த்தி இல்லறத்தைச்சிறப்பித்தல்,தளராமல் உழைத்து இல்லறம் நடத்தும் தலைவனுக்குஉழவுக்குரிய எருதைத் தலைவி உவமை கூறல், தலைவியோடு அளவளாவிய தலைவன் அதற்குக் காரணமாகிய ஊழை வாழ்த்தல், தலைவிதலைவனது அருளைப் புகழ்தல், தலைவன் ஒரு காரியத்தைக் கருதிப்பிரிந்த காலத்தில் தனியே தன் நிறையே காவலாகஇருத்தல், தன் தலைவி தன் வீட்டிற்கு வந்த பின்னர்அவனோடு பொருந்தி இல்லறம் செய்யும் செல்வத்தைத்தலைவி வாழ்த்தல் என்பன இப்பகுதியைச் சார்ந்தனவாம். 11. 1கைக்கிளைப்படலம் ஆண்பாற் கூற்று ஒரு தலைவன் தலைவி ஒருத்தியை ஒருசோலையின்கண் கண்டு விரும்பி, 'இவள் திருமகளோ? வேறுதெய்வமகளோ?' என ஐயுற்றுப் பிறகு அவளதுநெற்றியில் வேர்வை உண்டாதலையும் அவள்அணிந்துள்ள மாலை வாடுதலையும் அவள் பாதம் பூமியிற்படுதலையும் கண்கள் இமைத்தலையும் கண்டு, 'இவள்மானிட மகளே' எனத்துணிவான். பிறகு, 'இவள் என் நெஞ்சத்திலே இருந்தும் என்னை அறியாதவளாகஇருக்கிறாள்' என்று எண்ணுவான்; 'இவளைப் பெற்றவர்கள்நெடுங்காலம் வாழவேண்டும்' என வாழ்த்தி அவளது பேரழகைப்பாராட்டுவான்.அப்பால் அவளது பழக்கத்தை விரும்பி அவளது அருமையைஅறிந்து மிகுதியாகப் புகழ்வான். அவளோடு பழகுதற்குக்காலம் நீட்டித்தலால் வருந்துவான்.பின்பு வெளிப்படையாக அவள்பால் இரப்பான். பெண்பாற் கூற்று ஒரு தலைவி தலைவனொருவனைக்கண்டுமெலிந்து அவனை விரும்பி, 'இனி மாலைக்காலம்வரின்துயரம் அதிகமாகுமே!' எனவருந்துவாள்;
1. கைக்கிளை -ஒருதலைக்காமம். |