| 57 | வலித்தல் மெலித்த னீட்டல் குறுக்கல் விரித்த றொகுத்தலும் வருஞ்செய்யுள்வேண்டுழி.
| 155 |
| 58 | ஒருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே.
| 156 |
| 59 | அன்னா னின்ன லற்றிற் றத்தந் தம்நம் நும்மே அஉ ஐகுன வின்ன பிறவுஞ் சாரியை மொழியே.
| 244 |
| 66 | தனிக்குறின் முன்னொற் றுயிர்வரி னிரட்டும்.
| 205 |
| 67 | தன்னொழி மெய்முன் யவ்வரி னிகரந் துன்னு மென்று துணிநரு முளரே.
| 206 |
| 69 | எண்மூ வெழுத்தீற் றெவ்வகை மொழிக்கு முன்வரு ஞநமய வக்க ளியல்பும் குறல்வழி யத்தனி ஐநொது முன்மெலி மிகலுமா ணளனல வழிநத் திரியும்.
| 158 |
| 70 | ணளமுன் டணவும் னலமுன் றனவு மாகுந் தநக்க ளாயுங் காலே.
| 237 |
| 76 | புள்ளியு முயிரு மாயிறு சொன்முன் தம்மி னாகிய தொழின்மொழி வரினே வல்லினம் விகற்பமு மியல்புமா வனவுள.
| 256 |
| 79 | உரிவரி னாழியி னீற்றுயிர் மெய்கெட மருவும் டகர முரியின் வழியே யகர உயிர்மெய்யா மேற்பன வரினே.
| 174 |
| 86 | செய்யிய எனும்வினை யெச்சம் பலவகைப் பெயரி னெச்சமுற் றாற னுருபே யஃறிணைப் பன்மை யம்மமுன் னியல்பே.
| 167 |
| 87 | வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய் யேகலு முரித்தஃ தேகினு மியல்பே.
| 68 |