கருதிற்று ......... தெய்வப் புணர்ச்சியும் பாங்கற்கூட்டமும் தோழியாலாய
கூட்டத்துப் பகற்குறியும் இரவுக்குறியும் வரைவுகடாதலும் உடன்போக்கு
வலித்தலுமென ............’
என்று இந்நூலை மேற்கோள் காட்டுகின்றனர். இங்ஙனமே “முக்கட்கூட்டம்”
(உக) என்ற சூத்திரத்தின் மூலமும் உரையும் இதிலுள்ளபடியே மேற்கோளாக அவராற் காட்டப்பட்டுள்ளன. குறள், கற்பியல், அவதாரிகையில்
பரிமேலழகர்,
‘வரைந்தெய்திய பின் தலைமகன் அறம் பொருளின்பங்களின்
பொருட்டுச்
சேயிடையினும் ஆயிடையினும் தலைமகளைப் பிரிந்து செல்லும்.
என்றெழுதும் பகுதியில்
சேயிடைப் பிரிவு, ஆயிடைப் பிரிவு என இந்நூலுட்
குறிக்கப் பெறுவன காணப்படுகின்றன. இவற்றால் இவ்விரண்டு
உரையாசிரியர்களுக்கும் முற்பட்ட காலத்தினர் இந்நூலாசிரியரென்று
கொள்ளலாகும்.
இலக்கண நூல்களில் தொல்லாசிரியர் கருத்துக்களை தாம்
மேற்கொண்டதைப் புலப்படுத்தும் பொருட்டு அந்நூல்களின் ஆசிரியர்கள்
‘என்ப’, ‘என்மனார்’ என்பன போன்ற சொற்களை அமைப்பது மரபு.
குறிஞ்சியைக் குறுஞ்சி யென்றும் (சூ. 3), மகிணனை மகுணனென்றும் (சூ. 8)
இந்நூல் குறிக்கின்றது குரிசில் குருசிலென்றும் பரிதி பருதி யென்றும்
வழங்குதல் இங்கே நினைத்தற்குரியது.
கற்பொழுக்கத்தைப் பற்றிக் கூறும் சூத்திரத்திலுள்ள “முக்கட் கூட்டம்”
என்பது இன்னதென்று இப்பொழுது விளங்கவில்லை; அதன் உரையில்,
‘முக்கட் கூட்டமுடைய கற்பு’ என்ற பகுதி காணப்படுகின்றது.
என்ற சூத்திரமும்,
‘அல்லதூஉம், பிறரும் மக்கட் கூட்டம் களவிற்கில்லையென்றமைய மக்கட்கூட்டம் கற்பிற்குண்டென்பது பெறப்பட்டதென்று விரித்துரைத்
தாராகலானு மென்க’ (யா. வி. 22. உரை)
என்பதும் அப்பகுதி
மக்கட்கூட்டம் என்று இருத்தல் கூடுமென்று ஊகிக்கச் செய்கின்றன. ஆயினும், இச் சூத்திரத்தையும் உரையையும் அப்படியே
எடுத்து மேற்கோள் காட்டும் களவியற் காரிகையுரையில் முக்கட்கூட்டமென்ற
தொடரே இருக்கின்றது. சூத்திரத்தை மட்டும் நோக்குகையில் முக்கட்கூட்டமென்பதற்கு அறத்தொடு நிலையென்னும் பொருள்
கொள்ளக்கிடக்கின்றது. அங்ஙன |