முகவுரை
 
vii

 
“தூய்மை சான்ற தொல்குடித் தோன்றிய

வாய்மை நாவின் மதிதரன் போல

உயர்தவ முனிவர் சாரப்

பெயரா நிலையதிப் பிறங்குபெரு மலையே”(32)
 

“தந்துநீ யளித்த தண்டழை காண்டலும்

வந்தன ளெதிர்ந்த மடந்தை நெஞ்சம்

மண்மிசை விளங்கிய வழுத்தூர் மதிதரன்

நுண்ணியற் பனுவ நுழைபொரு ணுனித்த

வாய்மொழி யமிர்த மடுத்தவர் மனமென

ஆனிலை பெற்றன்றி யானறிந் திலனே.”(52)

 

வழுத்தூரென்னும் பெயருடைய ஊரொன்று தஞ்சை ஜில்லாவில் ஐயம்பேட்டைக்கு வடக்கே குடமுருட்டியாற்றின் தென்கரையில் உள்ளது இவ்வழுத்தூர் அதுவே போலும். ‘வழுத்தூர் காக்கும் புணையின்’ என்றது வெள்ளம் பெருகிய காலத்தில் அவ்வூரினர் ஓடத்திலேறிக் கரைசேர்ந்தன ரென்று நினைக்க இடந்தருகின்றது. அன்றிப் புணையென்பது பிறருக்குப் பற்றுக்கோடாகிய ஒரு தலைவனைக் குறிப்பாற் சுட்டியதாகக் கொள்ளலும் ஆம்; “கள்வனுங் கடவனும் புணைவனுந் தானே” (குறுந். 318) வழுத்தூரில் ‘அரண்மனை மேடு’ என்றதோரிடம் இருக்கிறதென்பர். அங்கே ஓர் அரண்மனை யிருந்ததென்றும் அவ்வரண்மனையில் ஓரதிகாரியோ சிற்றரசனோ வாழ்ந்திருந்தனனென்றும் கூறுவர்.

வழுத்தூரில் வாழ்ந்திருந்த மதிதரரென்பார் நற்குடியிற்றோன்றியவர்; வாய்மை தவறா மாண்பினர்; தவவொழுக்கினர்; பல நூலாராய்ச்சி யுடையவர்; நல்லுபதேசம் புரிபவர். இவை மேற்கண்ட செய்யுட்களால் அறியப்படுவன. இச்செய்யுட்களை இயற்றிய ஆசிரியருக்கு அவர் ஆசிரியராக இருத்தலுங் கூடும். நுண் இயற்பனுவல் நுழைபொருள்
நுனித்த என்பது நுண்ணிய இலக்கண நூல்களின் அரிய பொருள்களை ஆராய்ந்தவென்று பொருள்பட்டு,அம்மதிதரர்,இலக்கணநூல்களிற் சிறந்தஆராய்ச்சி யுடையவரென்பதைப் புலப்படுத்தும். மதிதரரென்பது சிவபெருமான் திரு நாமங்களில் ஒன்றாதலின் அவரும் அவரைச் சார்ந்து பயின்ற இவ்வுதாரணச் செய்யுட்களை இயற்றியவரும் சிவபக்திச் செல்வர்களென்று கொள்ளலாம்.

இந்நூலின் ஏட்டுப்பிரதியொன்று பல வருஷங்களுக்கு முன், பவானி போர்டு ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் ம-ள-ளஸ்ரீ குமாரசாமிபிள்ளை யவர்களிடமிருந்து கிடைத்தது இதன் முதற்பகுதியும் பிற்பகுதியும் கிடைக்குமோ வென்று பல இடங்களுக்குச் சென்று