கடவுள் வாழ்த்து
|
|
'மா நிலம் சேவடி ஆக, தூ நீர் |
|
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக, |
|
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக, |
|
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக, |
5 |
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய |
|
வேத முதல்வன்' - என்ப- |
|
'தீது அற விளங்கிய திகிரியோனே.' |
உரை |
|
பாரதம் பாடிய பெருந்தேவனார்.
|