முகப்பு |
கணிபுன் குன்றனார் |
226. பாலை |
மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்; |
||
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப் |
||
பொன்னும் கொள்ளார், மன்னர்-நன்னுதல்!- |
||
நாம் தம் உண்மையின் உளமே; அதனால் |
||
5 |
தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, |
|
என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய, |
||
சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும் |
||
இன்ன நிலைமைத்து என்ப; |
||
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே. | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.-கணி புன்குன்றனார்
|