முகப்பு |
இரை தேர் எண்கின் |
125.குறிஞ்சி |
'இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை |
||
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி, |
||
நல் அரா நடுங்க உரறி, கொல்லன் |
||
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும் |
||
5 |
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம்' என, |
|
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை |
||
நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று |
||
நம்மொடு செல்வர்மன்-தோழி!-மெல்ல |
||
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர் |
||
10 |
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை, |
|
மென் தினை நெடும் போர் புரிமார் |
||
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே. | உரை | |
வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
|