முகப்பு |
உள் இறைக் குரீஇ |
181. முல்லை |
உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல் |
||
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி, |
||
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை |
||
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன |
||
5 |
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின், |
|
துவலையின் நனைந்த புறத்தது அயலது |
||
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து, |
||
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப, |
||
கையற வந்த மையல் மாலை |
||
10 |
இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த |
|
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப |
||
வந்தன்று, பெருவிறல் தேரே; |
||
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே. | உரை | |
வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.
|